கோவை கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு..!

கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி - கோவை சாலை கிட்ஸ் பார்க் பள்ளி அருகே நேற்று இரவு 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.



அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு மூதாட்டியின் விவரங்கள் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...