கோவை: தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும் குறைந்தபட்ச கூலியாக ரூபாய் 605 வழங்க கோரி சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வேலை நேரம் ஆங்கிலேயர் காலத்தில் அதிகாலை 5.45 மணி என்று நிறுவப்பட்டது. இன்றைய நிலையிலும் அதனையே பின்பற்றி வருகிறோம்.
இதனால், 3 மணி அளவிலேயே தூய்மைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழல் இன்றும் நிலவி வருகின்றது.

எனவே, வேலை தொடங்கும் நேரத்தை காலை 7 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேலும் கோவையில் தூய்மைப் பணியாளருக்கு குறைந்தபட்ச தினசரி கூலி ரூ.333 ஆக உள்ளது. இதனை 605 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.