கோவை: கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 123-குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்தவர்கள் 11 பேர், தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் 404 பேர் என சேர்த்து 415 பேர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே 46 பேருக்கு நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 123 பேருக்கு நிவாரண நிதி அளிப்பதற்கான ஒப்புதலைத் தமிழக அரசு அளித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களாக 415 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்த 284 குழந்தைகளின் விண்ணப்பங்கள் முதல்கட்டமாகச் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்றவர்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக விண்ணப்பித்த 284 பேரில் ஏற்கனவே இரண்டு பெற்றோர்களையும் இழந்த 8 பேர், தாய் அல்லது தந்தையை இழந்த 38 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அவர்களின் பாதுகாவலர்களிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம் அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்னையிலிருந்தே வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தகட்டமாகக் கோவை மாவட்டத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கும், தாய் அல்லது தந்தையை இழந்த 123 குழந்தைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான ஒப்புதலைத் தமிழக அரசு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.