கோவை: மத்திய அரசைக் கண்டித்து திராவிட தமிழர் கட்சியினர் திருவோடை தங்கள் கைகளிலும், தலையிலும் ஏந்தியவாரு மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினர்.
கோவை: மத்திய அரசைக் கண்டித்து திராவிட தமிழர் கட்சியினர் திருவோடை தங்கள் கைகளிலும், தலையிலும் ஏந்தியவாரு மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினர்.
அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதை தடுக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பிய திராவிடர் தமிழர் கட்சியினர்.
தற்போது பல்வேறு பொதுத்துறை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கபடுவதை தடுக்க வலியுறுத்தி திராவிடத்தமிழர் கட்சியினர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதன் நகலை கோவை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்க வந்த அவர்கள் கையிலும் தலையிலும் திருவோடு ஏந்தியவாரு வந்திருந்தனர்.
அரசுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் அனைவரும் திருவோடுதான் எந்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் இவ்வாறு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களது நூதன முறைப்போராட்டம், மாவட்ட ஆட்சியர் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.