கோவை: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு 5000 தபால்களை அனுப்பி போராட்டம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகிலுள்ள தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

சிலிண்டர் எரிவாயு விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வரும் நிலையில் தற்பொழுது 900-ரூபாயை எட்டியுள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தும் வகையில் 5000-தபால்களை அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு அக்கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் 5000-தபால்களைப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தமிழகத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நடத்துவோம் என்று மயூரா கூறினார்.