கோவை: வால்பாறை அருகே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவரை ஐந்தாவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு அணை நிரம்பி தண்ணீர் வெளியேறக் கூடிய சேடல் அணை பகுதியில் கடந்த 30ம் தேதி மாலை சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த கணேசன் ஓய்வு காவல் உதவி ஆய்வாளர். இவரது மகன் ஸ்ரீராம் (24) கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்கள் நான்கு பேருடன் வால்பாறையை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். சோலையாறு அணை நிரம்பி உள்ளதால் சேடல் அணை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது. அந்த ஆற்றில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. ஸ்ரீராம் மற்றும் நான்கு நண்பர்கள் சோலையாறு அணைப் பகுதியைச் சுற்றி பார்த்துவிட்டு, சேடல் அணை பகுதிக்கு வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து விளையாடினர்.
அப்பொழுது, புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். திடீரென்று, குளிக்கும் பொழுது ஸ்ரீராம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் காப்பாற்ற முடியாமல், காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சேக்கல்முடி காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காணாமல்போன ஸ்ரீராம் என்பவரே தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அன்று இரவு நேரமானதால் மறுநாள் காலையில் மீண்டும் தேடினர். இரண்டாம் நாள் தேடினர். அணையில் இருந்து தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதால் இரண்டு பிரிவாக பிரிந்து தேடும் பணியை தீவிரம் செய்தனர்.
இருப்பினும், ஸ்ரீராமை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும், நான்காவது நாளாகவும் தேடினர். இன்னும் கிடைக்காத நிலையில் இன்று 5வது நாளாக ஸ்ரீராம் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் மழை பெய்து கொண்டு இருப்பதால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து குறையாமல் வருகிறது. அணை நிரம்பி வருவதால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி சேடல் அணை பகுதியில் வெளியேறுகிறது. இதனால் ஸ்ரீராம் உடலை கண்டுபிடிக்கும் பணி தொய்வடைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாக வால்பாறை மானாம்பள்ளி வனத்துறையினர் சார்பாக ஸ்ரீராம் உடல் கரை ஒதுங்கி உள்ளதா என்று கண்காணிக்க, பறக்கும் கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த தண்ணீரில் மூழ்கி உயிர்களை காப்பாற்றும் பயிற்சி பெற்ற வீரர்கள் இன்டர் டிரைவ் என்ற தனியார் கம்பெனி மூலம் சேடல் அணைப்பகுதியில் நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 5 நாட்களாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஸ்ரீராமின் உடலை தேடி வரும் நிலையில், அவரது பெற்றோர்களும் நண்பர்களும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.