கோவையில் வீட்டில் இருந்த சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த வியாபாரி மகன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ. 3.5 லட்சம் பணம் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த வியாபாரி மகன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ. 3.5 லட்சம் பணம் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ் புரம் பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்தவர் ஜிஜேந்தர் மேத்தா (38). இவர் மேட்டுப்பாளையம் ரோடு காமராஜபுரம் பகுதியில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். வீட்டில் இவரது 10 வயது மகன் ரிஷப் இருந்துள்ளார். ஜிஜேந்தர் மேத்தாவின் குடும்பத்தினர் பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று விட்டனர்.

அப்போது, வீட்டுக்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிறுவனிடம் உன்னுடைய அப்பா கடையில் லெட்டர் பேடு வாங்கி வரச் சொன்னார் என இந்தியில் கூறி உள்ளார்.

சிறுவன் லெட்டர் பேடு தேடிக்கொண்டிருந்த போது வீட்டின் அறைக்குள் புகுந்த அந்த வாலிபர் மேசை மீது இருந்த பணத்தை பார்த்த உடனே சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுவனின் கழுத்தில் வைத்து சத்தம் போடக் கூடாது, மீறி சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி பின்னர் அந்த 3.5 லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பையில் போட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர், இது தொடர்பாக ஆர்.எஸ் புரம் போலீசில் புகார் தரப்பட்டது. வீட்டில் உள்ள நபர்கள் குறித்த விவரங்கள் நன்றாக தெரிந்த நபர் கைவரிசை காட்டி இருப்பதாக தெரிகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...