ஊரடங்கு தளர்வு: கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -

ஊரடங்கு தளர்வால் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 6-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



இதற்கு http://coimbatore wilderness.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 7826070 883 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இணையதளம் மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் காலை 9 மணி முதல் 9.30 வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு, நண்பகல் 11 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.

பின்னர் 10.30 மணி முதல் 11 மணி வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.

இதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிமுதல் 12.30 மணி வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு 2.30 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.

பின்னர் 1.30 முதல் 2 மணி வரை 150 பேர் அனுமதிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.

இதேபோல, காரமடை பூச்சம் சூழல் சுற்றுலா பகுதியில் உள்ள 3 தங்கும் விடுதிகளில் விடுதிக்கு 4 நபர்கள் என 12 நபர்கள் மட்டும் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...