கோவை: வால்பாறையில் உலக ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் செப்டம்பர் மாதத்தில் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை உலக ஊட்டச்சத்து தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் வால்பாறையில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் வால்பாறையில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் நடுமலையைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் கீதா மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்ற அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வண்ணம் வால்பாறை டவுன் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பெண்கள் கற்ப காலம் தொடங்கி, குழந்தை பெற்று குழந்தைக்கு இரண்டு வயது வரை 1000 நாட்கள் தங்கம் நாட்கள் என்று அழைக்கப்படுகிறது.
இந்த 1000 நாட்களில் குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்து வழங்கினால் மட்டுமே குழந்தைகள் நன்றாக வளரும், தாய் குழந்தை ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை நன்றாக ஆரோக்கியமாக வளரும் என்றும், ஊட்டச்சத்து பாதிப்பால் குழந்தைகள் அதிகம் சிரமப் படுவார்கள் என்றும் விழிப்புணர்வு செய்தனர்.

மேலும், சத்தான உணவுகள் வழங்கவும் வைட்டமின்கள் நிறைந்த உணவு பொருட்களை உண்ணவும், வைட்டமின் ஏ, சி, டி, வைட்டமின்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கவும், பழவகைகளை கொடுக்கவும், கட்டாயம் குழந்தை பெற்றவர்கள் சுமார் 1.5 வயது வரை குழந்தைக்கு தாய் பால் கொடுக்கவும் அறிவுறுத்தல் செய்தனர், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஒரு வயது முதல் 5 வரை வரை அங்கன்வாடி மையங்களை அணுகி குழந்தைகளை சேர்த்து அரசு கொடுக்கும் இலவச முட்டை சத்து உணவுகளைப் பெற்று குழந்தைகளுக்கு சத்தான முறையில் வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.