கோவையில் கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாநகர் காவல்துறை நடவடிக்கை.!!

கோவை: தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2-பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர்கள் மீது பல்வேறு கஞ்சா உட்படக் கொள்ளை வழக்குகள் இருப்பதால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2-பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர்கள் மீது பல்வேறு கஞ்சா உட்படக் கொள்ளை வழக்குகள் இருப்பதால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த அர்ஜுன், கார்த்தி கஞ்சா விற்றதாகக் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். பிடிபட்ட இருவரிடமிருந்தும் 5-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

கோவை சரவணம்பட்டி காவல்துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி கஞ்சா விற்ற இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பதியப் பரிந்துரை செய்து இருந்தார்.

அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மீது குண்டர் சட்ட பதியப்பட்டன. அதற்கான ஆவணங்கள் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டது.

இனி கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...