கோவை குறிச்சி குளம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

கோவை: கோவையில் இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையில் இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, போதை பொருள் விற்பனை செய்யும் ஆசாமிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நேற்று, கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் இளைஞர் ஒருவர் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன் பேரில், உடனடியாக ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் கணேஷ் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, போதை பொருள் விற்பனை செய்யபட்டதை உறுதி செய்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் நிஷார் என்பதும் போதைக்காக பயன்படுத்தப்படுகின்ற நைட்ரோசென் மாத்திரையை அந்த நபர விற்றதும் தெரியவந்தது. உடனடியாக, அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து மாத்திரைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...