ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மர்ம நபர்களால் திருடப்பட்ட யானைத்தந்தம் மீட்பு.. வனத்துறையினர் நடவடிக்கை.!!

கோவை: உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் மர்ம நபர்களால் திருடப்பட்ட யானைத்தந்தத்தை வனத்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் மர்ம நபர்களால் திருடப்பட்ட யானைத்தந்தத்தை வனத்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறியப்பட்டது.

அந்த யானையைக் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தினர். அப்பொழுது அந்த யானையின் ஒரு தந்தம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. யானையின் தந்தத்தைத் திருடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று வனத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பாறை இடுக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தந்தம் மீட்கப்பட்டது. யானைக்கு ஒரு தந்தம் மட்டுமே இருந்துள்ளது.

அதைத்தான் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரக தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும் அந்த தந்தத்தைத் திருடிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...