பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது-ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை.!!

கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழுக் கூட்டம் இன்று பொள்ளாச்சி- கோவை ரோட்டில் தற்காலிகமாகச் செயல்பட்டு வரும் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த தெற்கு ஒன்றிய அலுவலகத்தை இடித்து புதிய கட்டிடம் பணிகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக, அங்கு இருந்த வேளாண்மைத் துறை கட்டிடத்தை இடித்து, இடமாற்றம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், கிராமப் பகுதிகளிலிருந்து வரும் விவசாயிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக நேரிடும் எனவே ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை கட்டிடம் அமைத்துத் தரவேண்டும், கிராமப்பகுதிகளில் தடுப்பூசி மையங்களில் முறையான பயிற்சி இல்லாத நபர்களைக் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முறையான பயிற்சி பெற்ற செவிலியர்கள் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கிராமப் பகுதிகளுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...