விலகியது தடை! ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் திறக்க அனுமதி.!! குரங்கு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்.!!

கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் திறக்க அனுமதி - குரங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் திறக்க அனுமதி - குரங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், ஆழியார் குரங்கு அருவி, டாப்ஸ்லிப் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

பொது முடக்கம் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாகச் சுற்றுலாத்தலங்கள் திறக்க அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டது.

இருப்பினும், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குரங்கு அருவி, டாப்சிலிப், வால்பாறை செல்ல தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில், இன்று முதல் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இதில் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி இன்று நோய் கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தாரோடு குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இதேபோல, டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள அரசு தங்கும் விடுதிகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி யானைச் சவாரி மற்றும் மலையேற்றம் செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...