திருப்பூர்: பல்லடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மயானம் அமைத்துத் தர எதிர்ப்பு தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மயான வசதி இல்லாததால் இறப்பவர்கள் உடலை அடக்கம் செய்ய வழியின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களின் மயான வசதிக்காக அப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து, இதுகுறித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், உடனடியாக மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு மயான வசதியை உடனடியாக வருவாய் துறையினரும், காவல்துறையினரும் செய்துதர வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் கொசவம்பாளையம் சாலை பிரிவில் சமூக நீதிக் கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் திரண்ட மாதப்பூர் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.