விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை நடத்துவோம்: பிரசுரத்தை விநியோகித்த டேவிட் கைது.!!

கோவை: விநாயகர் சதுர்த்தியன்று ஜெபயாத்திரை நிச்சயம் பலன் அளிக்கும், அதனால் கட்டாயம் ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்ற பிரசுரத்தை விநியோகித்த டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: விநாயகர் சதுர்த்தியன்று ஜெபயாத்திரை நிச்சயம் பலன் அளிக்கும், அதனால் கட்டாயம் ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்ற பிரசுரத்தை விநியோகித்த டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கோவை தடாகம் சாலையில் உள்ள செயிண்ட் பால் பள்ளி, மற்றும் கலை அறிவியல் கல்லூரியை நடத்தி வருபவரான டேவிட் விநாயகர் சதுர்த்தி அன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்பது போன்ற பிரசுரங்களை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பிரசுரம் பள்ளி நிர்வாக லெட்டர் பேடில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் "கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே, மிஷனெரிகளே மிஷனெரி இயக்க தலைவர்களே கோவையில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து ஜெபயாத்திரை நடத்தியதன் விளைவாகத் தான் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக் கூடாது. 1 அல்லது 2 நாட்களில் சிலையைக் கரைத்து விட வேண்டும். போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த சட்டங்களினால் தற்போது விநாயகர் சதுர்த்தியன்று பிரச்சினை வராமல் உள்ளது. இதற்கு எல்லாம் ஜெபயாத்திரை தான் காரணம் என நம்புகிறோம். அதே போன்று ஆண்டும் செப்டம்பர் மாதம் 10 தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றோ அல்லது அதற்கு முன்போ ஜெபயாத்திரை நடத்த விரும்புகிறேன்.

இந்த கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இந்து முன்னணி அமைப்பினர் நேற்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டேவிட்டை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தனர். புகாரின் அடிப்படையில் செயிண்ட் பால் கல்வி நிறுவன சேர்மேனான டேவிட்டை துடியலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று ஜெபயாத்திரை நடக்கும் என்று பிரசுரங்களை வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். கோவை கணுவாய் செயின்ட் பால் கலை அறிவியல் கல்லூரி என்ற கிறிஸ்தவ கல்லூரியின் சேர்மேன் டேவிட் மீது 3 பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சாதி, மத, மொழி, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல்(IPC 153(a)(1), உள்நோக்கத்துடன் அவமதித்தல்(504), இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (ipc 505(2))ஆகிய பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டேவிட்டுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...