கோவையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை: கோவையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


கோவை: கோவையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை பகுதியில் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

அப்போது, அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது என அவர்களை தடுத்து அவர்கள் மீது நோய் தொற்று விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை அகில பாரத மக்கள் கட்சி தலைவர் ராமநாதன், இந்து மக்கள் புரட்சி படை சேர்ந்த பீமா பாண்டி, சத்திரபதி சிவாஜி பேரவை நிறுவனர் சரவணன், இந்து மக்கள் கட்சி தமிழகத்தைச் சேர்ந்த காலனி பிரபு, சக்தி சேனா இந்து மக்கள் கட்சி சேர்ந்த சரஸ்வதி உட்பட ஐந்து அமைப்பைச் சேர்ந்த 13 நபர்கள் தடையை மீறி கோயில் வாசலில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்பொழுது, அவர்கள் தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவோம் எல்லா தெருக்களிலும் விநாயகர் சிலை வைத்து வழி படுவோம் என கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து காந்திபுரம் போலீசார், 13 இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது நோய் தொற்று பரவல் விதிமீறல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...