விநாயகர் சதுர்த்தி: திருப்பூரில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சாலை மறியல்!

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதித்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்தி தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள விநாயகர் கோவிலில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து பெண்கள் மண்ணை வாரித் தூற்றி சாபமிட்டனர்.



மேலும், இந்து முன்னணியினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து பண்டிகைகளை தடை செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் இதை இந்து மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தமிழக அரசுக்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று கோயில்களில் வழிபாடு நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செப்டம்பர் 10ம் தேதி திட்டமிட்டபடி 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இருப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு இந்து முன்னணியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.

இதேபோல, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட டவுன்ஹால், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியினர் கையில் விநாயகர் சிலைகளை வைத்தும், விநாயகர் வேடமணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...