கோவையில் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாத மாணவனுக்கு ரூ.15,000 வழங்கிய திமுக பொதுக்குழு உறுப்பினர்..! பொதுமக்கள் பாராட்டு!

திருப்பூர்: கோவையில் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாத மாணவனுக்கு ரூ.15,000 வழங்கி திமுக பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாத மாணவனுக்கு ரூ.15,000 வழங்கி திமுக பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று 9, 10, 11, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர் மேற்கு மாவட்டம் தி.மு.க கணபதி பகுதி 46-வது வட்ட பகுதி கழகத்தின் பொறுப்புக் குழு உறுப்பினராக இருக்கும் சம்பத்குமார் சந்தித்து அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் அவர் தாயாருடன் வந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது, கல்லூரி திறக்க உள்ள நிலையில், மூன்றாவது செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியாமல் கஷ்டப்படுவதாகவும் பணம் கட்டினால் தான் கல்லூரிக்கு செல்ல முடியும் என கூறினார். அதனை தொடர்ந்து, அவர் கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக ரூ. 15,000 வழங்கி சம்பத்குமார் உதவிசெய்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல, திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கணபதி பகுதி 46வது வட்டம் திரு.வி.கா வீதியைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், மிக ஏழ்மை நிலையில் இருப்பதாலும் தன் மகன் பாலமுருகன் பிகாம் சி.ஏ. முதலாம் ஆண்டு மூன்றாம் பருவ கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்கு உதவிட வேண்டுமாய் கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், அதை ஏற்று கணபதி சம்பத்குமார் அவர்கள் கல்லூரி கட்டணம் ரூபாய் 15000 தன் சொந்த பணத்தை வழங்கி உதவினார்.

இந்த நிகழ்ச்சியில் தி. மு. க மாணவரணி தர்மா, இளைஞரணி ஜெகதீஷ், இலக்கிய அணி சேரன், ஸ்டீபன், காமராஜ், கண்ணையன், சிவக்குமார் ,ஈஸ்வரன், சதீஷ், ஆர்டிஆர் கார்த்தி, சசி, மாதேஷ், கார்த்தி பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...