கோவை: கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி (9,10,11,12) வகுப்புகளுக்கும், அங்கன்வாடி மையங்கள், மற்றும் கல்லூரிகள் நேற்று, செப் 1 ஆம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
கோவை: கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்,
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி (9,10,11,12) வகுப்புகளுக்கும், அங்கன்வாடி மையங்கள், மற்றும் கல்லூரிகள் நேற்று, செப் 1 ஆம் தேதி முதல்செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட துவங்கியதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்தனர். அதே போல், கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் அதில் பயிலும் குழந்தைகளுக்கு நேற்று முதல் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையத்தின் செயல்பாடு
சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு அடிப்படை கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
அங்கன்வாடிகளை நம்பி உள்ள வேலைக்கு செல்லும்பெற்றோர்கள்..!
மேலும், குழந்தைகளை எவ்வாறு சுகாதாரமாக மற்றும் ஆரோக்கியமாக வளர்ப்பது என்பது குறித்தும் பெற்றோர்களுக்கு
விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றது.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர். வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதால் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வீடுகளுக்கே விநியோகம்
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் கல்வி பயில அனுமதிக்கப்படவில்லை. இதனால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்குவதில் தடை ஏற்படக் கூடாது என்பதால், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வீட்டிலேயே சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்க தேவையான அரிசி, பருப்பு மற்றும் முட்டை போன்றவைகளை அங்கன்வாடி மைய ஊழியர்கள், குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
35,000 குழந்தைகள் பயன்
தற்போது, செப்டம்பர் 1ம் தேதி முதல் குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முதல் குழந்தைகளுக்கு மதிய உணவு அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கப்பட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு 35 ஆயிரம் குழந்தைகள் வந்துள்ளனர், என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் மீனாட்சி கூறுகையில்:
தமிழக அரசின் உத்தரவை அடுத்து அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளான நேற்று குழந்தைகள் ஆர்வமாக வந்தனர். அவர்களை அங்கன்வாடி ஊழியர்கள் வரவேற்றனர். அவர்களுக்கு ஊட்ட சத்து மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் குழந்தைகள் வந்தனர்," என்றார்.