கோவையில் பேராசிரியர் வீட்டை உடைத்து திருடிய 3-பேர் கைது.!! 30-பவுன் நகை பறிமுதல்.!!

கோவை: கோவையில் பேராசிரியர் வீட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு, 30-பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் பேராசிரியர் வீட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு, 30-பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாண் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அவர் வீட்டிலிருந்த நகை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.



இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்திருந்தார். காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தன. இந்த நிலையில் குற்றவாளி 3 பேரை காவல்துறை கைது செய்து 30 பவுன் நகை மீட்கப்பட்டது.

கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ சிறுவாணி ரோடு சாலையில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் ஆனந்தம். இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆனந்தம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குத் திண்டுக்கல் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் படுக்கையறையிலிருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆனந்தன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த வடவள்ளி காவல்துறை 4 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு 3 குற்றவாளிகளைக் கைது செய்தனர். கைது செய்த குற்றவாளிகளிடம் இருந்து 30 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர். பேரூரை சார்ந்த குட்டி என்ற அஜீத்குமார் 25, ராஜீவ் 23, ஆனந்த் 27, ஆகியோரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...