கோவை: கோவையில் ஊரடங்கு விதிமுறை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 440-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் எனச் சட்டத் திருத்த மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து உடன் வெளிநடப்பு செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவை மாநகரில் ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, ரேஸ் கோர்ஸ், இராமநாதபுரம், செல்வபுரம், என பொது இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது அத்துமீறி தொற்றுநோய் பரவும் விதமாகச் செயல்பட்டது உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் காவல்துறை அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் 440-பேர் மீது ஊரடங்கு விதிமீறல் தொற்று நோய் பரவல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.