ராணுவ வீரர் போல் நடித்து கோவையில் கூகுள் பே மூலமாக 40 ஆயிரம் மோசடி..!

கோவை: கோவையில் ராணுவ வீரா் போல நடித்து கூகுள் பே என்ற ஆன்லைன் பண வர்த்தகம் செயலி மூலமாக ரூ.40 ஆயிரம் வரை மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவை: கோவையில் ராணுவ வீரா் போல நடித்து கூகுள் பே என்ற ஆன்லைன் பண வர்த்தகம் செயலி மூலமாக ரூ.40 ஆயிரம் வரை மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை காட்டூா் பகுதியைச் சோ்ந்த சாதிக் (31), ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது செல் போனுக்கு சந்தீப் என்ற பெயரில் ஒருவா் தொடா்பு கொண்டு, தான் ராணுவ வீரா் எனவும் கேண்டீனில் பயன்படுத்தும் வகையில் தரமான வெட் கிரைண்டா் வேண்டும், எனக் கேட்டுள்ளாா். மேலும், வெட் கிரைண்டரின் மாடல், விலை போன்ற விவரங்களை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புமாறும் கூறியுள்ளாா்.

அந்த நபர் கேட்ட விவரங்களை சாதிக் அனுப்பியுள்ளாா். அப்போது அந்த நபா், பணம் அனுப்புவதில் ராணுவப் பிரிவில் பல்வேறு விதிமுறைகள் உள்ளதால், பின்னர் தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறியுள்ளாா். இதற்கு, சாதிக்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனே, அந்த நபா் கூகுள் பே மூலமாக ரூ.5 அனுப்புமாறு சொல்ல, சாதிக் ரூ.5 அனுப்பி சோதனை செய்துள்ளார். பணம் வந்து விட்டதாக கூறிய அந்த நபா், மேலும், ரூ.10 திரும்ப அனுப்பியுள்ளார். பின்னா், அந்த நபா் பணம் அனுப்பும் கூகுள் பே செயலியின் எண் விவரங்களை தனக்கு அனுப்ப வேண்டும் எனவும் அப்போது தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறி அந்த விவரங்களையும் சாதிக்கிடம் வாங்கியுள்ளாா்.

சிறிது நேரத்திலேயே, சாதிக் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுத்துள்ளார், இதைத் தொடா்ந்து சாதிக் அந்த நபரை தொடா்பு கொண்டு எனது கணக்கில் இருந்து பணம் எடுத்தீா்களா? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு, அந்த நபா் பரிவா்த்தனையில் தவறு நடந்துவிட்டது. நீங்கள் பணம் இருக்கும் வேறு வங்கிக் கணக்கில் இருந்து காா்டு விவரங்களை அனுப்புங்கள், மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் எனக் கூறியுள்ளாா்.

அவர் கேட்ட அனைத்து விவரங்களையும் சாதிக் அனுப்பியதும், அந்த நபா் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து மீண்டும் ரூ.29 ஆயிரத்து 700 எடுத்துக் கொண்டாா். மீண்டும் அந்த நபரை தொடா்பு கொண்ட போது, மீண்டும் தவறு ஏற்பட்டு விட்டது சென்று சமாளித்துள்ளார். இதை ராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்து விடவேண்டாம். எனக்கு வேலை போய்விடும் என கெஞ்சி சாதிக்கின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு வரும் ரகசிய எண் விவரங்களை கேட்டு வாங்கியுள்ளாா்.

அதிலிருந்து மீண்டும் ரூ.9 ஆயிரத்து 990 எடுத்து என 3 முறையில் ரூ.40 ஆயிரத்தை அந்த நபா் நூதனமாக பறித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த சாதிக் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்ததன் பேரில் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...