கோவை: கிராமங்களில் தடையற்ற பி.எஸ்.என்.எல் இணையச் சேவை பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தினார்.

செப். 1 –கிராமங்களில் தடையற்ற தொலைத்தொடர்பு சேவை மற்றும் இனையச் சேவையை மேம்படுத்திட வேண்டும் என தொலைத்தொடர்பு ஆலோசனை குழுக் கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.
கோவை மாவட்ட தொலைத்தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையேற்றார்.

இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பி.எஸ்.என்.எல் டவர்களை பராமரிக்க வேண்டும். இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வீடு தோறும் இணைய சேவை என்கிற திட்டத்தில் பைபர் இனைய சேவை திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தொடர் விளம்பர பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட ஆலோசனைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பெரும்கார்ப்ரேட் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைக்குச் சலுகைகள் மற்றும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது.
கார்ப்ரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களைக் கட்டாய ஓய்விற்கு அனுப்புவது, ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இழுத்தடிப்பது. தேவையான உபகரணங்கள் வாங்காமல் இருப்பது. பி.எஸ்.என்.எல் சொத்துக்களை விற்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும், இந்திய மக்கள் பி.எஸ்.என்.எல் சேவையையே பெரிதும் நம்புகிறார்கள் என்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது.
லபாம் என்கிற நிலையில் தனியார் நிறுவனங்களும், சேவை என்கிற நிலையிலிருந்து பி.எஸ்.என்.எல் நிறுவனமும் இயங்குகிறது. கிராமங்கள் தோறும் பரந்து விரிந்து கிளைகளைக் கொண்டுள்ள பி.எஸ்.என்.எல் துறையைப் பாதுகாக்க வேண்டும். இதன் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள்.
இதனை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். தற்போதைய கொரோனா தொற்று போன்ற சூழலில் மாணவர்களின் கல்வி என்பது இனைய வழி கல்வி என்பது தவிர்க்க முடியாதாக மாறியுள்ளது.
ஆனால் கிராமங்களில் இனையச் சேவை தடையின்றி கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. இதனை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் கணக்கில் கொண்டு தடையற்ற இனைய சேவை தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் பஞ்சாயத்து அமைப்புகளின் நிதி உதவியைப் பெற்று இலவச (WIFI) திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். இதேபோன்று பல பகுதியில் சேவை குறைபாடு உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளோம் அதனையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பி.எஸ்.என்.எல் முதன்மை பொதுமேலாளர் வேங்கடசுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கனகராஜ், மூர்த்தி, கோபால், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.