கோவை: அனிதாவின் நினைவு நாளான இன்று பெண் விடுதலை கட்சியின் தலைவர், சபரிமாலா நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரானிடம் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலைக் கொடுத்தார்.

அனிதாவின் நினைவு நாளான இன்று பெண் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார். அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்த இவர் தன் பதவியை ராஜிநாமா செய்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார்.
நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட அனிதா உயிரிழந்து 4-ஆண்டு நிறைவடைந்தநாளான இன்று குடியரசுத் தலைவருக்கு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் மூலம் கடிதம் அனுப்பப்படும் என்றும், பிரதமருக்கும், நாட்டின் அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்படும் என்று கூறிய சபரிமாலா, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற மகிழ்விலிருந்த நிலையில், நீட்தேர்வு அறிவிப்பு என்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கு அனிதவின் பெயரை வைப்பதில் இல்லை ஆறுதல், அனிதா உட்பட 18-மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்ததை நினைவில் வைத்திருக்கிறோம் என்றால் முதலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.
இப்போதும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை உள்ளதாகவும், ஏதாவது செய்து நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார். நீட் தேர்வு இந்தியா முழுதும் ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்படுவதாகவும், அடுத்தாண்டாவது நீட் தேர்வு ரத்து செய்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.