கோவை: கே.என்.ஜி புதூர் பகுதியில் இயங்கி வரும் st.Paul's கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்ட லெட்டர் பேடில், விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரைக்கு கிறிஸ்துவ கல்லூரியின் தலைவர் அழைப்பு விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் இயங்கி வரும் st.Paul's கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்ட லெட்டர் பேட் ஒன்றில் "கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே, மிஷனெரிகளே, மிஷனெரி இயக்க தலைவர்களே, கோவையில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 3-ஆண்டுகளாக நாம் ஜெபயாத்திரை நடத்தியதன் விளைவாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக் கூடாது.
ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சிலையைக் கரைத்து விட வேண்டும். போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த சட்டங்களினால் தற்போது விநாயகர் சதுர்த்தியன்று பிரச்சினை வராமல் உள்ளது.
இதற்கு எல்லாம் ஜெபயாத்திரை தான் காரணம் என நம்புகிறோம். அதே போன்று இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் 10 தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்போ ஜெபயாத்திரை நடத்த விரும்புகிறேன். இந்த கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும் கல்லூரியின் சேர்மன் டேவிட்டை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னனி அமைப்பினர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட அவர்கள் இது போன்ற அறிவிப்பு இந்துக்களுக்கு எதிராக உள்ளதாகவும் இந்து மத நம்பிக்கையை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஆனால் அந்த லெட்டர் பேடில் அக்கல்லூரியின் சேர்மன் டேவிட் அவரது கையொப்பமில்லை என்பது கடந்த 16ம் தேதி லெட்டர் பேட் அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.