கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் சத்துணவு ஊழியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பிள்ளையார் புரத்தைச் சேர்ந்தவர் ஜேசி (54), சத்துணவு ஊழியர். இவர் நேற்று தனது சகோதரர் பீட்டர் என்பவருடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். காவல்துறை சோதனையைக் கடந்து உள்ளே சென்றபோது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை அவரை தடுத்தனர். விசாரணையில் அவரது நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து விட்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஜெசி தெரிவித்தார்.
தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல்துறை விசாரணை செய்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஜெஸ்ஸி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.