கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென் குமாரபாளையம் மற்றும் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், போலி கவுண்டன்பாளையம் ஊராட்சியில் 4வது வார்டு, ஜமீன் ஊராட்சியில் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், தென் குமாரபாளையம் ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள் 1,421 பேரும் பெண்கள் 1,541 பேரும் சேர்த்து, மொத்தம் 2,962 வாக்காளர்கள் உள்ளனர். திவான்சாபுதூர் ஊராட்சியில், மொத்தம் ஆண் வாக்காளர்கள் 4,140 பேரும், பெண் வாக்காளர்கள் 4,415 பேரும் என மொத்தம் 8,556 பேர் உள்ளனர்.
இதேபோல, போலி கவுண்டன்பாளையம் 4வது வார்டில் ஆண்கள் 88 பேரும், பெண்கள் 94 பேரும் சேர்த்து 182 பேர் உள்ளனர்.
ஜமீன் முத்தூர் ஊராட்சியில் 6வது வார்டில் ஆண்கள் 313 பேரும், பெண்கள் 321 பேரும் சேர்த்து மொத்தம் 634 வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்த ஒன்றிய அதிகாரிகள், தேர்தல் அறிவித்து வேட்பு மனுத்தாக்கல் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.