கோவை மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்..!

கோவை: கோவை மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளி திரும்பினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளி திரும்பினர்.



தமிழகத்தில் இன்று 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவுள்ளது. பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு கோவை பள்ளிகளில் மாணவர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையை ஆய்வு செய்தும், தனி நபர் இடைவேளை விட்டும், நுழைவு வாயில்களில் சானிடய்ஸ்ர் பயன்படுத்தியும் மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே மாணவர்களை வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர்.



இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதலே மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். தமிழக அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வகுப்புகளை நடத்தவிருப்பதாக ஆசிரியர்கள் தெளிவுபடுத்தினர்.

கோவையில் மொத்தம் 259 பள்ளிகள், 100 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் வகுப்புகளுக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாதபட்சத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.



Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...