வால்பாறையில் ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி!

கோவை: வால்பாறையில் ஒரு வருடத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் ஒரு வருடத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, 9, 10, 11, 12ம் வகுப்புகள் இன்று முதல் துவங்குகின்றன. வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளியின் நுழைவாயிலில் மாணவ, மாணவிகளுக்கு கைசுத்திகரிப்பு திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து உடல் வெப்பமானி பரிசோதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மாணவர்கள் வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.



மேலும், மாணவர்களுக்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஏற்படுத்தப்படுகிறது. இன்று பள்ளி தொடங்கிய முதல் நாளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...