கோவை: பெண்ணிடம் தாலி செயினை பறித்த குற்றவாளிகளை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.

கோவை அருகே கடந்த 5-நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தாலி செயினை இரண்டு பேர் சேர்ந்து கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அவர்களைப் புலன் விசாரணை செய்து விரைந்து பிடித்த சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கோவை மாவட்டம், நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆனந்தி என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 24.08.2021 அன்று தனது அலுவலக வேலை முடித்து வீட்டிற்குச் செல்வதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கருப்பு நிற இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.
இது சம்பந்தமாக அவர் நெகமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் நெகமம் காவல் ஆய்வாளர் சரவணபெருமாள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
புகார்தாரர் அளித்த சிறுசிறு அடையாளங்களை வைத்து குற்றம் நடந்த இடத்தில் தீவிர புலனாய்வு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டு மேற்படி விசாரித்ததில் குற்றவாளி இவ்வழியாகச் சென்றிருக்கலாம் என யூகித்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குற்றம் நடந்த நேரத்தை கணக்கிட்டு தனிப்படையினர் சுமார் 30-கிலோமீட்டர் வரை தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட அகமதுமுஷரப் மற்றும் வாசிம்கான் ஆகியோரை கைது செய்தனர்.
மேற்படி நபர்களிடம் இருந்த 2 சவரன் தாலி செயினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழிப்பறி வழக்கைத் திறம்படச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த காவல் ஆய்வாளர் சரவணப்பெருமாள் மற்றும் தனிப்படையினரைக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்துப் பாராட்டிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.