கோவையில் ஒரு கிலோ தங்க கட்டியை பதுக்கி வைத்துக்கொண்டு தற்கொலை நாடகம் ஆடியவர் மீது வழக்குப்பதிவு.!!

கோவை: ஒரு கிலோ தங்க கட்டியை பதுக்கி வைத்துக்கொண்டு தற்கொலை நாடகம் ஆடியவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: ஒரு கிலோ தங்க கட்டியை பதுக்கி வைத்துக்கொண்டு தற்கொலை நாடகம் ஆடியவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை நகை பட்டறை ஊழியர் ஒருவரிடம் உரிமையாளர் ஒரு கிலோ தங்கக் கட்டியைக் கொடுத்து நகை செய்யுமாறு கூறி உள்ளார். அவர் நகையை எடுத்துக் கொண்டு செல்லும் பொழுது பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுத் தங்கக்கட்டி மாயமாகி விட்டதாக விட்டதாக நாடகமாடியும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டும் நாடகமாடிய பட்டறை தொழிலாளி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்த நாகசுந்தரம் என்பவரின் மகன் செல்வராஜ் (51). இவர் அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 35 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வரும் செல்வராஜ்யிடம் 15 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இவரிடம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்கிற சந்துரு என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1004 கிராம் எடையுள்ள தங்க செயின்களை கட்டிங் செய்யும் பணிக்காக ஸ்ரீதரனிடம் செல்வராஜ் கொடுத்திருந்தார்.

பட்டறையிலேயே வைத்துச் செய்ய வேண்டிய நகை பணிகளை ஸ்ரீதரன் செய்யாமல் உரிமையாளர் செல்வராஜிடம் சொல்லாமல் எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் பைக்கில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது செல்வபுரம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி ஸ்ரீதரன் கீழே விழுந்ததாகவும் இதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்ரீதரன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் செல்வராஜுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்ற செல்வராஜ் இடம் ஸ்ரீதரன் தான் பைக்கில் செல்லும் போது மயங்கி விழுந்ததாகவும் நகை பையைக் காணவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

பட்டறையிலேயே வைத்துச் செய்ய வேண்டிய நகை பணிகளை அனுமதி இல்லாமல் நகைகளை எதற்காக எடுத்துச் சென்றாய் என்று செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குச் சரியான பதில் அளிக்காமல் ஸ்ரீதரன் மழுப்பலான பதிலளித்துள்ளார். இதுகுறித்த ஸ்ரீதரன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். காவல்துறை இது குறித்து விசாரணை நடத்திய போது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ் தனது பட்டறையிலிருந்து எடுத்துச் சென்ற நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து செல்வபுரம் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு ஸ்ரீதரனிடம் கூறியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் ஸ்டேஷனுக்கு நேரில் வராமல் ஸ்ரீதரன் தவிர்த்து வந்தார். இதையடுத்து காவல்துறை அவரை செல்போன் மூலம் அழைக்கவே வீட்டில் ஸ்ரீதர் தூக்கு போட முயற்சி செய்துள்ளார்.

அவரை அவரது குடும்பத்தார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நகை பட்டறை உரிமையாளர் செல்வராஜ் வெரைட்டி ஹால் ரோடு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நகை திருடு போனதாக நாடகமாடி தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீதரன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...