கோவையில் தனியார் நிறுவன ஊழியர் நள்ளிரவில் வெட்டிக் கொலை.!! 4-பேர் கைது.!!

கோவை: தனியார் நிறுவன ஊழியர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: தனியார் நிறுவன ஊழியர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, மதுக்கரை அருகே தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை அடுத்த மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரமேஷ்(23). இவர் கருமத்தம் பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுக்கரை போடிபாளையம் அருகே வழிமறித்த சில நபர்கள் திடீரென்று ரமேசின் கழுத்து, வயிறு தோள்பட்டை உள்ள இடங்களில் அரிவாளால் வெட்டியதுடன், கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் மர்ம ஆசாமிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அதேபகுதியைச் சேர்ந்த ரகு கிருஷ்ணன்(22), உதயகுமார் (28), சந்தோஷ்(25), சஞ்சீவ்குமார்(24) ஆகியோரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.



அதில் அவர்கள், ரமேசை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4-பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

மேலும், கடந்த ஜூன் மாதம் போடிபாளையம் பகுதியில் போதை ஊசி பிரச்சினையில் ஜீவானந்தம் என்பவரை மணிகண்டன் கொலை செய்தார்.

இதற்குப் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஜீவானந்தத்தின் உறவினர்களாக உதயகுமார், சந்தோஷ், சஞ்சீவ்குமார், நண்பர் ரகுகிருஷ்ணன் ஆகிய 4-பேரும் ரமேசை வெட்டிக் கொலை செய்தார்களா? அல்லது வேறுகாரணமா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...