கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌ ஆகியவற்றின்‌ உரிமையாளா்களுடன் மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌.!!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌ ஆகியவற்றின்‌ உரிமையாளா்களுடன் ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தலைமையில்‌ நடைபெற்றது.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌ ஆகியவற்றின்‌ உரிமையாளா்களுடன் ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தலைமையில்‌ நடைபெற்றது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌ ஆகியவற்றின்‌ உரிமையாளர்களுடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ இன்று 31.08.2021 மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த அலோசனைக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விவரங்களை மாநகராட்சிக்குத் தெரியப்படுத்த வேண்டும்‌ என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேற்குறிப்பிட்ட விவரங்களை மாநகராட்சியின்‌ https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற இணையதளத்தில்‌ தெரியப்படுத்த வேண்டும்‌.)

ஹோட்டல்‌ உரிமையாளர்கள்‌, திருமண மண்டப உரிமையாளர்கள்‌ திருமணம்‌ நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ இதர நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை ஒரு வாரத்திற்கு முன்பே சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம்‌ தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும்‌. முன்‌ அனுமதியின்றி நடைபெறும்‌ திருமணம்‌ உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்‌ தொடர்புடைய திருமண மண்டபம்‌ மற்றும்‌ ஹோட்டல்‌ உரிமையாளர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. திருமண நிகழ்ச்சி மற்றும்‌ இதர நிகழ்ச்சிகளுக்கு 50-நபர்களுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

மேலும்‌, திருமண நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்பவர்களிடம்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌ எனவும்‌, நுழைவு வாயிலில்‌ கிருமி நாசினி திரவம்‌ வைத்து அனைவரின்‌ கைகளையும்‌ சுத்தம்‌ செய்து அனுமதிக்க வேண்டும்‌ எனவும்‌ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம்‌ மண்டப உரிமையாளர்கள்‌ அறிவுறுத்த வேண்டும்‌. சுப நிகழ்ச்சிகள்‌ நடைபெறும்‌ பொழுது கலந்து கொள்பவர்கள்‌ அனைவரையும்‌ சமூக இடைவெளியுடன்‌ அமரவும்‌ மண்டப உரிமையாளர்கள்‌ வலியுறுத்த வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட்‌ சாலை, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி, இராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்‌ மில்‌ சாலை, என்‌.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர்‌ சிக்னல்‌ முதல்‌ ஒண்டிப்புதூர்‌ மேம்பாலம்‌ வரை (திருச்சி ரோடு, ஹோப்‌ காலேஜ்‌ சிக்னல்‌ (அவிநாசி ரோடு), காளப்பட்டி ரோடு, டி.பி.ரோடு, என்‌.எஸ்‌.ஆர்‌.ரோடு, ஆரோக்கியசாமி ரோடு, சரவணம்பட்டி, கணபதி சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, பீளமேடு சந்திப்பு, என்‌.எச்‌.ரோடு, இடையர்‌ வீதி, வைசியாள்‌ வீதி, தாமஸ்‌ வீதி, வெரைட்டி ஹால்‌ ரோடு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டா்‌ வீதி, காந்திபுரம்‌ 1 முதல்‌ 11 வரை உள்ள தெருக்கள்‌ மற்றும்‌ சலிவன்‌ வீதி ஆகிய பகுதிகளில்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ நிகழ்ச்சிகள்‌ இருந்தால்‌ நடைபெற தடை விதிக்கப்படுகிறது.

மாநகராட்சியின்‌ இணையதளத்தில்‌ பதிவு செய்யப்படும்‌ விவரங்களைக் கொண்டு மாநகராட்சி அலுவலர்கள்‌ சம்பந்தப்பட்ட இடங்களில்‌ அரசின்‌ பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்‌, 50 நபாகளுக்கு மிகாமல்‌ கலந்து கொள்ளுதல்‌ போன்ற நடைமுறைகள்‌ பின்பற்றப்படுகின்றனவா என கள ஆய்வு மேற்கொள்வார்கள்‌.



இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்‌ கு.விமல்ராஜ்‌, நகா்‌ நல அலுவலர்‌ மரு.சதீஸ்குமார்‌, அனைத்து மண்டல உதவி ஆணையர்கள்‌, மண்டல சுகாதார அலுவலாகள்‌, மற்றும்‌ ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌ ஆகியவற்றின்‌ உரிமையாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...