கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு மற்றும் தடுப்பூசி சான்று அவசியம்.!! நோய் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!!

கோவை: கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு மற்றும் தடுப்பூசி சான்று அவசியம், நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு மற்றும் தடுப்பூசி சான்று அவசியம், நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் இருப்பதால் ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியும் கேரளாவில் நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது.

கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்வதற்கு சுமார் பதிமூன்று வழித்தடங்கள் உள்ளது. குறிப்பாகப் பொள்ளாச்சியிலிருந்து ஆறு வழித்தடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல தேவைகளுக்காகக் கேரளா மாநிலம் சென்று திரும்புகின்றனர்.

இதனால் தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே கேரளா மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நோய்க்கான இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் தமிழகத்திற்குள் நுழைவதற்காக இ-பதிவு செய்திருக்க வேண்டும்.

இல்லையேல் கண்டிப்பாக காவல்துறையால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் போன்ற அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கோவை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.



தமிழகத்திலிருந்து கேரளா சென்று திரும்புபவர்கள் கண்டிப்பாகத் தமிழக எல்லையான கோபாலபுரம், நடுப்புனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...