கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ முன் களப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு.!

கோவை: நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும், மாநகராட்சி பள்ளிகளில்‌ நடைபெற்றுவரும்‌ தூய்மைப்பணிகளை ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும், மாநகராட்சி பள்ளிகளில்‌ நடைபெற்றுவரும்‌ தூய்மைப்பணிகளை ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ முன்களப்பணியாளாரகள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்தும்‌, நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, மாநகராட்சிப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ காய்கனி மார்க்கெட்‌ ஆகியவற்றில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 31.08.2021 நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.50 டாடாபாத்‌ கார்னர்‌ சுகாதார ஆய்வாளா்‌ அலுவலகத்தில்‌ முன்களப்பணியாளாகள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, முன்களப்பணியாளா்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற பரிசோதனைகளைச் செய்யும்போது, பரிசோதனையின்‌ விபரங்களை கோவிட்‌-19 கள ஆய்வுப்‌ பதிவேடுகளில்‌ பதிவு செய்ததை ஆய்வு மேற்கொண்ட பின்‌, சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களைப் பரிசோதனை செய்து கொரோனா தொற்று ஏற்பட்டது.

கண்டறியப்பட்டால்‌ அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்றப்படுகிறது. இத்தகைய பணிகளை நீங்கள்‌ மேலும்‌ மிகச்சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களை கண்டறியப்படுதல்‌ வேண்டும்‌. வீடு தவறாமல்‌ வீட்டில்‌ உள்ள அனைவருக்கும்‌ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்‌.

களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்தும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌, மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத் தடுப்பதற்காகப் பொதுமக்களிடம்‌ வீடுகளில்‌ உபயோகமற்ற பொருட்கள்‌, பயனற்ற பிளாஸ்டிக்‌ பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்‌. வீடுகளில்‌ உள்ள தண்ணீர்‌ தொட்டிகளைக் கொசுக்கள்‌ புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌ என்பதைப் பொதுமக்களிடம்‌ போதிய விழிப்புண்வினை ஏற்படுத்த வேண்டும்‌ என தெரிவித்தார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.51, காந்திபுரம்‌, காளிங்கராயன்‌ தெரு, சி.டி.எம்‌.நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ ஆய்வு (மேற்கொண்ட ஆணையாளர்‌‌ காப்பிணி தாய்மார்களுக்குப் பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்களுக்குப் போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, தாய்‌-சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும்‌, புற நோயாளிகளின்‌ பதிவேடு மற்றும்‌ டாக்டர்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்துக் கேட்டறிந்த பின்னர்‌ அங்குள்ள

பராமரிப்பு பதிவேடுகள்‌ மற்றும்‌ கணினி பதிவேற்றம்‌ (scanning Center)செய்யும்‌ மையத்தில்‌ அதன்‌ செயல்பாடுகளைக்‌ குறித்தும்‌, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள‌ உள்நோயாளிகளின்‌ நலன்‌ குறித்துக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌‌, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியாகளிடம்‌ கேட்டறிந்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.51க்குட்பட்ட காந்திபுரம்‌, சீனிவாசபுரம்‌ காய்கனி மார்க்கெட்டில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, வியாபாரிகள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌, சமூக இடைவெளியை பின்பற்றியும்‌, அரசின்‌ வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா என ஆய்வு மேற்கொண்ட.



பின்னர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ பள்ளியில்‌ மாணவ, மாணவிகளின்‌ சோக்கைகள்‌ குறித்துக் கேட்டறிந்த பின்னர், கணினி அறை, ஆய்வகங்கள்‌, மின்‌ வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு, வகுப்பறைகளில்‌ நடைபெற்றுவரும்‌ தூய்மைப்பணிகள்‌ குறித்து, பொறியியல்‌ பிரிவு அலுவலா்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களிடம்‌ கேட்டறிந்த பின்‌, அங்கு பணியில்‌ ஈடுபட்டிருந்த பணியாளா்களிடம்‌ பள்ளியின்‌ உட்புறபகுதிகள்‌ மற்றும்‌ சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்த பின்னா்‌, வார்டு எண்‌.52க்குட்பட்ட சத்தி சாலையில்‌ அமைந்துள்ள மாடு அறுவை மனையைப் பார்வையிட்டு அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., கேட்டறிந்தார்கள்‌.

இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, உதவி நகர்நல அலுவலர்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, வ.உ.சி உயிரியல்‌ பூங்கா இயக்குநர் மரு.செந்தில்நாதன்‌, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ பார்வதி, செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...