பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு 102-மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலர், அரசு மதுபானங்களைப் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஊஞ்சவேலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(44), என்பது தெரியவந்தது.
மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார். இதையடுத்து, அவரை சோதனையிட்டதில் கையில் வைத்திருந்த ஒரு பெட்டியில் அரசு மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், பூசாரிபட்டி டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாகப் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை 102-மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து முருகனைக் கைது செய்தனர்.