கோவை: கோவையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் உல்லாசமாக இருக்க இங்கு பெண்கள் இருப்பதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபடும் சம்பவங்கள் கோவையில் தொடர்ந்து வழக்கமாகி வருகிறது.

நூதன முறையில் நடைபெறும் விபச்சாரத்தை, தொடர்ந்து கண்காணித்து வரும் போலீசார், விபச்சார தரகர்களை கைது செய்தும், பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த வண்ணம் இருக்கின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு ராமானுஜம் நகர் பகுதியில் சைன் பியூட்டி சலூன் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் நேற்று மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த நபர் மசாஜ் செய்வதற்கு 1500 ரூபாய் என்றும் கூடுதலாக, 1000 ரூபாய் கொடுத்தால் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி உள்ளனர். இதையடுத்து, அந்த இளம் பெண்களையும் காட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சதீஷ், ஏ.டி.எம் மில் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு, நடந்தவற்றை சிங்காநல்லூர் போலீசாரிடம் புகாராக அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது அம்பலம் ஆனது.
இதையடுத்து, அந்த பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரதீப் (27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த இருகூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண், வடவள்ளி ராமலிங்க கவுண்டர் வீதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஆகிய நான்கு பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.