கோவை: பன்முகத்திறன் கொண்ட விமான நிலைய இயக்குனர் தொழிலில் மட்டுமல்ல சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் மற்றும் தமிழ் ஆர்வலர், இவர் பன்முகத் திறமை கொண்டவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
கோவை: பன்முகத்திறன் கொண்ட விமான நிலைய இயக்குனர் தொழிலில் மட்டுமல்ல சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் மற்றும் தமிழ் ஆர்வலர், இவர் பன்முகத் திறமை கொண்டவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள செந்தில் வளவன் இதற்கு முன் மதுரை விமான நிலையத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் பன்முகத் திறமை கொண்டவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
கோவை விமான நிலைய வட்டாரங்கள் மற்றும் கோவை இலக்கியவாதிகள் கூறியதாவது,
"விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் அலுவலகம் சார்ந்த பணியில் மட்டும் சிறப்பாகச் செயல்படக் கூடியவர் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர். இந்திய விமான நிலைய ஆணையகத்தில் பணியில் சேர்ந்த துவக்கத்தில் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் என்று சொல்லக்கூடிய ஏடிசி துறையில் பணியாற்றி உள்ளார். தற்பொழுது விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு தமிழ் இலக்கியவாதியும்கூட, இவர் எழுதிய தமிழ் இலக்கியக் கட்டுரைகள் தமிழ் நாளிதழில்களில் வெளிவந்துள்ளன. மதுரை விமான நிலையத்தில் இவர் பணியாற்றியபோது கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இலக்கிய விழாவில் தலைமை ஏற்க நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க முடிவு செய்திருந்தோம்."
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை விமான நிலைய இயக்குனரிடம் கேட்டபோது,
"மிகவும் தன்னடக்கத்துடன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார், நான் விளையாட்டு வீரர் அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ளது என்றும், தமிழ் இலக்கியவாதியா என கேட்ட போது, தமிழ் தாய்மொழி. இலக்கியவாதி என்றெல்லாம் என்னைக் கூற மாட்டேன் என்று சிரித்தபடி பதிலளித்தார்."