சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!!

கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்காகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க இன்று தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது.

இதற்கு அதிமுக எம்.எல்.ஏ,க்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ,க்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ் தலைமையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களை காவல்துறை கைது செய்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பது தொடர்பான சட்ட மசோதாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...