கோவை: பிரிக்கால் நிர்வாகத்தின் பணியிட மாற்றத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கோவை பிரிக்கால் தொழிற்சாலையில் இடது தொழிற்சங்க மய்யத்தின்(LTUC) தலைமையிலான சங்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டில் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக கண்களும் சேர்ந்து 2017 ஏப்ரல் 25 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் கோவை பிரிக்கால் தொழிலாளர்களும் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எட்டு நாட்கள் ஊதியத்தை பிடித்தம் செய்து பிரிக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது ஒரு புதிய ஊதிய உயர்வு கோரிக்கைகள் அதை தொடர்ந்து வேலை நிறுத்தமும் நடந்தது. தொழிலாளர் துறை முன்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வேலை நிறுத்தத்திற்காகத் தொழிலாளர்களைப் பழி வாங்க மாட்டோம் எங்கள் சங்கத்தோடு மட்டுமே ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று உறுதிமொழி அளித்த நிர்வாகம் வேலைநிறுத்தம் முடிந்து வேலைக்குத் திரும்பிய தொழிலாளர்களின் சங்கத்தைச் சிறுபான்மை சங்கம் ஆக்குவதற்காக 2018 டிசம்பர் 3 முதல் 302 பேரை உத்தரகாண்ட், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை மூலம் தொழிற்தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்பியது.
மேலும் பணியிட மாற்ற உத்தரவை நிறுத்தி வைக்கவும் அரசாணை போடப்பட்டது. 10B உத்தரவை அமல்படுத்த மறுத்த நிர்வாகம் அந்த உத்தரவுக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சங்கமும் அரசு உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் சென்னை தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்றுவந்த பணியிட மாற்றத்திற்கு எதிரான வழக்கில், பிரிக்கால் நிர்வாகத்தின் 282 பேர்களின் பணியிடமாற்றம் அநியாயமானது.
மீண்டும் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கு செலவு தொகை கொடுக்க வேண்டும் என சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் நீதிபதி முருகன் அவர்கள் ஆகஸ்ட் 24ல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தொழிலாளர்கள் தரப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் குமாரசாமி (உயர்நீதிமன்ற வக்கீல்) தலைமையில் ஜனநாயக வக்கீல்கள் சங்கத்தின் வக்கீல்கள் பாரதி, சுரேஷ், நிவேதா உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர்.
தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பால், 3 ஆண்டுகளாக வேலை, வருமானம் இல்லாமல் தவித்து வரும் 282 தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கிலுள்ள 5 தொழிலாளர்கள் இறந்து விட்டனர்.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு வேலை இழந்த தொழிலாளர்களை மீண்டும் வேலைவாய்ப்பு பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகவல் இடது தொழிற்சங்க மய்யம்(LTUC) கோவை மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.