கோவை: அமெரிக்கத் தூதரக அதிகாரி இன்று இரவு கோவை வந்து, நாளை தொழில்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் தூதரக அலுவலகத்தின் அதிகாரி இன்று இரவு கோவை வருகிறார். நாளை மதியம் கோவை தொழில் துறையினர் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கோவை அவினாசி ரோட்டில் அமைந்துள்ள இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவை கிளை, வளாகத்தில் இந்த சிறப்புக் கூட்டம் நடக்கிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரி கோவை தொழில் துறையினருடன் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் பங்கேற்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தியத் தொழில் வர்த்தக சபை அலுவலகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தொழில்துறையினருடன் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடர்ந்து வேறு சில நிகழ்ச்சிகளிலும் அமெரிக்கத் தூதரக அதிகாரி பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரி கோவை வருவதை முன்னிட்டு காவல்துறை தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.