கோவை: வால்பாறையில் நேற்று சேடல் அணைப்பகுதியில் குளிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீராம் என்பவரை 2-வது நாளாக வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் நேற்று சேடல் அணைப்பகுதியில் குளிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீராம் என்பவரை 2-வது நாளாக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு அணை நிரம்பி தண்ணீர் தமிழகத்திற்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட சேடல் அணை என்ற இடத்தில் கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஸ்ரீராம் என்பவர் அவரது நண்பர்களுடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

சோலையாறு அணைப் பகுதியைப் பார்த்து விட்டு சேடல் அணை என்ற பகுதியில் குளிக்கச் சென்று 5 பேரும் குளித்து விளையாடினர். ஸ்ரீராம் என்பவர் தண்ணீரில் குளிக்கும்பொழுது தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மூலம் ஸ்ரீராம் என்பவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி இன்று இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.
மேலும், தண்ணீர் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் தேடி வருகின்றனர்.

இந்த தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்குச் செல்வதால் வனப்பகுதியில் அடித்துச் சென்றிருக்கலாம் என்று தேடி வருகின்றனர்.