விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கிணத்துக்கடவில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்.!!

கோவை: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கிணத்துக்கடவில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கோவை: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கிணத்துக்கடவில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அனைவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இனைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நகரச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழக இணைக்கும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் சிங், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், நகரத் துணைச் செயலாளர் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...