உடுமலை வனச்சரக பகுதியில் இறந்த யானையின் ஒற்றை தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம்; குற்றவாளியை பிடிக்க சிறப்பு படை அமைப்பு!

திருப்பூர்: உடுமலை வனச்சரக பகுதியில் இறந்த யானையின் ஒற்றை தந்தத்தை வெட்டி எடுத்த குற்றவாளியை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை வனச்சரக பகுதியில் இறந்த யானையின் ஒற்றை தந்தத்தை வெட்டி எடுத்த குற்றவாளியை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம், கரட்டுர் சுற்று, சடையம்பாறை சரக வனப்பகுதியில் கடந்த 29.08.2021 அன்று, ஒற்றை தந்த ஆண் யானை (வயது சுமார் 35 மதிக்கத்தக்க ) இறந்தது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் கணேஷ் அவர்கள், உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் அவர்கள், வனச்சரக அலுவலர் தனபால் அவர்கள், வனவர், வனகாப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அரசு வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் அவர்கள் மற்றும் கரட்டூர் கால் நடை மருத்துவர் அரவிந்த் அவர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்தை தணிக்கை செய்தனர்.

இந்நிலையில், தணிக்கை செய்த போது இறந்த யானையின் ஒற்றை தந்தம் காணாமல் போனது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று (30.08.2021) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவில் யானையின் தந்தமானது, யானையின் இறப்புக்கு பின் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உதவி வன பாதுகாவலர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடிப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...