வால்பாறையில் ஒற்றை காட்டு யானை வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்..!

கோவை: வால்பாறையில் ஒற்றை காட்டு யானை வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் ஒற்றை காட்டு யானை வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் தேயிலைத் தோட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் சுற்றிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தவரை காட்டு யானை மிதித்துக் கொன்ற சோக சம்பவம் நடைபெற்றது. வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானையை விரட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் தொடர்ந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளில் சுற்றி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மோகன் என்பவரின் வீட்டிற்கு இரவு 9 மணிக்கு வந்த காட்டு யானை அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து அருகில் உள்ள மரத்தையும் ஒடித்து சேதப்படுத்தியது.

இதையடுத்து, தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து இந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியிலேயே வலம் வருவது தொழிலாளர்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மீண்டும் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் இந்த ஒற்றை காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதியில் கொண்டு போய்விட வேண்டும் என்று அப்பகுதி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...