மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் உலா.!! பொதுமக்கள் அச்சம்.!!

கோவை: மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான கோவை மருதமலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாகக் குட்டிகளுடன் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது.

வனப்பகுதியிலிருந்து உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் மறைந்து விளைநிலங்களை உண்டு சேதப்படுத்தி வருவது வழக்கம்.

அவ்வாறு நேற்று முன்தினம் இரவு 10-மணி அளவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின் புறத்திலுள்ள வனத்தை ஒட்டிய குட்டையில் சுமார் மூன்று குட்டிகளுடன் யானைக்கூட்டம் மருதமலை அடிவாரம் வழியாக நாயக்கன் பாளையம் பகுதியில் சென்றது.

அங்குப் பயிரிடப்பட்டிருந்த சோளம் கம்பு உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. விவசாய தோட்டத்தில் கட்டி இருந்த கூடாரத்தை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியது அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்துச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து சென்றது.

வனத்துறையினர் யானைகளைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர். மருதமலை அண்ணா பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வோர் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...