கோவை: வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மாயம் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மாயம் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணைப் பகுதியில் நேற்று கனமழை பெய்து சோலையார் அணை நிரம்பியது இதையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சேடல் டேம் என்ற பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்று வருகிறது.
கோவை பிஎஸ்சி மருத்துவக் கல்லூரி கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் ஸ்ரீராம் என்பவர் தனது நண்பர்கள் 4 பேர்களுடன் வால்பாறை பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.
சோலையார் அணை பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு சேடல் அணை என்ற இடத்தில் நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர் அப்போது ஸ்ரீராம் என்பவர் தண்ணீரில் மூழ்கிக் குளிக்கும் பொழுது தண்ணீர் அடித்துச் சென்று விட்டதாகக் கூறி நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சேக்கல் முடி காவல் நிலைய அதிகாரி வேல்முருகன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் காணாமல் போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி தோல்வி அடைந்தது மீண்டும் காலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வரை தேடும் பணி தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.