பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 61-ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டதையடுத்து, கிழக்கு காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி பழனியப்பன் வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 47-மார்க்கெட் ரோட்டில் ஹார்ட்வேர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார்.
அப்போது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியிலிருந்து, ஒரு லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும், 25 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளிக் காசு காணாமல் போனது தெரியவந்தது.
இதனை அடுத்து கிழக்கு காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.