கோவை: கருணை கொண்ட உள்ளங்களால் கிடைத்தது நிதி உதவிக்கு கோவை கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோவை: கருணை கொண்ட உள்ளங்களால் கிடைத்தது நிதி உதவிக்கு கோவை கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நவீன் கூறியதாவது:
டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில், மத்திய பிரதேசத்தில் வரும் செப்டம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை தேசிய அளவிலான டென்னிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.
இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் நான் இடம் பெற்றுள்ளேன். டென்னிஸ் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல ஸ்டிச் பால் கிரிக்கெட் போட்டியிலும் நான் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன்.
நிதி பற்றாக்குறை காரணமாக என்னால் மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 1 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நாங்கள் இருக்க வேண்டும். இதற்காக ஆகஸ்ட் 31 காலை 6:00 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயிலில் நான் செல்ல வேண்டும்.
இதுகுறித்த செய்தி நேற்று 'சிம்ப்ளிசிட்டி' ஆன்லைன் செய்தி ஊடகத்தில் வெளியானது.
இதைத்தொடர்ந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ நா. கார்த்திக் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்தனர். இதன் காரணமாக எனக்கு மட்டுமல்ல எங்கள் அணியில் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சேர்த்து மொத்த ஸ்பான்ஸர் தொகையும் கிடைத்துள்ளது.
இதனால் எங்கள் அணியினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். தக்க நேரத்தில் நிதி உதவி அளித்து எங்களை ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நாங்கள் என்றென்றும் கடமை பட்டுள்ளோம்.
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் நிலைமையை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற சிம்பிளிசிட்டி ஆன்லைன் ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்த நல் உள்ளங்களின் பெயர் மற்றும் அவர்கள் அளித்த நிதி உதவியின் விவரம்:
DMK, Ex, MLA Mr. N. Karthik- Rs 10,000
Mr. Sachin- Rs- 8,000
Mr. Selvaraj Rs-2,500
Mr. Vinoth Kumar- Rs- 3,000
Mr. Aarthi -Rs- 300
Mr. Roshith- Rs-100
Mr. Ramesh Kumar- Rs 2,000
Mr. Balasubramani- Rs -500
Mr. Giri - Rs- 2,000
Mr. Shivashankar- Rs-1,000
Mr.Salmaan - Rs- 500